முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 37 பந்துகளில் 81 ரன்கள் தேவைப்பட்டபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.
பின் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலங்கை 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
Comments