Home இந்தியா இலங்கை – வெ.இண்டீஸ் இன்று பலப்பரிட்சை – இறுதிக்கு முன்னேறுவது யார்?

இலங்கை – வெ.இண்டீஸ் இன்று பலப்பரிட்சை – இறுதிக்கு முன்னேறுவது யார்?

475
0
SHARE
Ad

Tamil_Daily_News_87407648564தாகா, ஏப்ரல் 3 – உலக கோப்பை டி20 தொடரின் முதல் அரை இறுதிப் போட்டி இன்று தாகாவில் நடக்கிறது. இவ்வாட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் மோதுகின்றன.உலக கோப்பை டி20 தொடரில் சூப்பர்10 சுற்று முடிந்து பரபரப்பான அரை இறுதி ஆட்டம் ஆரம்பித்துள்ளது.

பாங்களாதேசம், தாகாவில் இன்று நடக்கும் முதல் அரை இறுதியில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியும், இலங்கை அணியும் மோதுகின்றன. உலக கோப்பை டி20-இல் இதுவரை எந்த அணியுமே கோப்பையை தக்க வைத்துக் கொண்டதாக சரித்திரமே இல்லை.

இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இந்திய நேரப்படி போட்டி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. மலேசிய நேரம் 9 மணிக்கு தொடங்குகிறது.