Home இந்தியா 20 ஓவர் உலக கோப்பை, இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்!

20 ஓவர் உலக கோப்பை, இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்!

591
0
SHARE
Ad

416943_367409186676944_450084595_nவங்காளதேசம், மார்ச் 21 – வங்கதேசத்தில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி துவங்கியுள்ளது. மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில், 16 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் நேரடியாக சூப்பர்-10 சுற்றில் விளையாடவுள்ள இந்திய அணி, தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது. முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இலங்கை, இங்கிலாந்தை சந்தித்தது.

இன்று டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வங்காளதேச மிட்புர் அறங்கில் இந்திய நேரம் 7 மணிக்கு நடைபெறுகிறது.