புதுடெல்லி, மார்ச் 21 – நாடுமுழுவதும் உள்ள மதச்சார்பற்ற ஓட்டுக்களை பிரித்து அதன் மூலம் மோடிக்கு உதவ அரவிந்த் கெஜ்ரிவல் முயல்கிறார் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உரிப்பினர் சந்திப் திட்சீத் தெரிவித்தாவது, சமீபத்தில் கெஜ்ரிவால், மோடிக்கு எழுதிய கடிதத்தில் 16 கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில் சாலை அமைத்தல், கல்வி, சுகாதாரம் மற்றும் வளர்ச்சி உள்ளிட்டவைகள் இடம் பெற்றிருந்தன.
ஆனால் குஜராத் கலவரம் பற்றி அதில் இடம் பெறவில்லை. இதன் மூலம் டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மதசார்பற்ற ஓட்டுக்களை பிரித்து அதன் மூலம் பாரதீய ஜனதாவிற்கு உதவ முனைகிறார் என்பது தெரிகிறது.
இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் ஆம் ஆத்மி கட்சி பாரதீய ஜனதாவில் இணைந்தாலும் நான் ஆச்சர்யபட போவதில்லை. என நாடாளுமன்ற உரிப்பினர் சந்திப் திட்சீத் தெரிவித்தார். டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சீத் என்பது குறிப்பிடத்தக்கது.