Home நாடு மஇகாவின் 4 தலைவர்களையும் நஜிப் சந்தித்தது உண்மைதான் – சரவணன்

மஇகாவின் 4 தலைவர்களையும் நஜிப் சந்தித்தது உண்மைதான் – சரவணன்

515
0
SHARE
Ad

m.saravanan1-may7கோலாலம்பூர், ஏப்ரல் 11 – தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.56 கோடி ஒதுக்கிய விவகாரத்தில் 4 மஇகா தலைவர்களை அறிக்கைதாக்கல் செய்யும் படி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் உத்தரவிட்டுள்ளார் என்று இணையத்தள செய்தியில் வெளிவந்துள்ளது.

இது உண்மைக்குப் புறம்பாணது என இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ சரவணன் கூறினார்.

நாங்கள் நால்வரும் பிரதமரை சந்தித்தது உண்மைதான். எங்கள் நால்வருக்கும் ஒவ்வொரு பிரிவுகளாக இந்தியச் சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்று மேற்கொள்காட்டி சில பொறுப்புகளை எங்களிடம் ஒப்படைத்தார் பிரதமர்.

#TamilSchoolmychoice

மேலும், இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளான பொருளாதாரம், சுகாதாரம், குடியுரிமை, இந்திய இளைஞர், விளையாட்டுத் துறை, கல்வி சம்பந்தப்பட்ட பொறுப்புகள் இதில் அடங்கும் எனவும், இதனிடையே இணையத்தள செய்தி குறித்து தமிழ்ப்பத்திரிகைகளில்  வெளியான செய்தி உண்மையில்லை என்றும் டத்தோ சரவணன் கூறியுள்ளார்.