உலுசிலாங்கூர், ஏப்ரல் 11 – நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் ஒதுக்கிய வெ.56 கோடிக்கும் மஇகாவுக்கும் சம்பந்தமில்லை எனவும் இந்நிதியை நிதியமைச்சுதான் நிர்வாகித்து வருவதாகவும் கமலநாதன் குறிப்பிட்டார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கான அரசாங்கம் ஒதுக்கிய வெ.56 கோடி வெள்ளி முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியை நிதியமைச்சுதான் நிர்வகித்து வருகிறது.
தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதியை அரசாங்கத்திடம் மஇகா பரிந்துரை மட்டுமே செய்யுமே தவிர நிதியை பெறாது என்றும் விளக்கினார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியை கல்வியமைச்சிடம் வழங்கியே திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அண்மையில் வெ.56 கோடி தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கியதாக பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கு பல்வேறு தரப்பில் கேள்விகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டதே தவிர வேறு எந்த நோக்கத்திலும் மஇகாவும் அதன் தலைவர்களுக்கும் எந்த சம்பந்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதி முழுவதும் நிதியமைச்சின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன் என்று கல்வித் துறை துணை அமைச்சர் பி.கமலநாதன் கூறினார்.