Home படிக்க வேண்டும் 2 நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜீவ் சூரி அறிவிக்கப்பட்டுள்ளார்!

நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜீவ் சூரி அறிவிக்கப்பட்டுள்ளார்!

609
0
SHARE
Ad

rajஹெல்சிங்கி, ஏப்ரல் 29 – நோக்கியா நிறுவனம் தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜீவ் சூரி என்பவரை நியமித்திருப்பதாக இன்று அறிவித்துள்ளது.

ராஜீவ் சூரியின் நியமனம் குறித்து நோக்கியாவின் தலைவர் ரிஸ்டோ சிலாஸ்மா கூறுகையில், “நிறுவனத்தை வழி நடத்த ராஜீவ் தான் சரியான மனிதர். நிறுவனத்தை புதிய கண்டுபிடிப்புகளோடு, சரியான நெறிமுறைகளுடன் இயக்கும் ஆற்றல் அவரிடம் உள்ளது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நோக்கியாவின் என்எஸ்என் (Nokia Solutions and Networks) யூனிட்டிற்கு இதுநாள் வரை சூரி (வயது 46) தலைமை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.