Home Featured தொழில் நுட்பம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறது நோக்கியா 3310

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறது நோக்கியா 3310

1174
0
SHARE
Ad

Nokia 3310 mobile phone, 2000.கோலாலம்பூர் – இன்றைய காலத்தில் திறன்பேசிகளில் வாரம் ஒரு புதிய இரகம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான செல்பேசி வாடிக்கையாளர்களின் ஒரே தேர்வாக இருந்தது நோக்கியா நிறுவனத்தின் 3310 என்ற செல்பேசி தான்.

கையடக்கமான வடிவத்தில், குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 3310 செல்பேசிகள், நவீன திறன்பேசிகளின் வரவால், நோக்கியா நிறுவனத்தால், உற்பத்தி குறைக்கப்பட்டு, பின்னர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நோக்கியா 3310 இரக செல்பேசிகளை சில மாற்றங்களுடன் மீண்டும் உற்பத்தி செய்து வெளியிட அந்நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனை இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலக செல்பேசி மாநாட்டில் அறிமுகம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

மலேசியாவில் அதன் விலை 276 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.