Home Featured நாடு கிம் ஜோங் நம் கொலையாளிகளில் ஒருவர் கைது!

கிம் ஜோங் நம் கொலையாளிகளில் ஒருவர் கைது!

600
0
SHARE
Ad

jong-nam-afp2கோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மை, விஷம் தெளித்துக் கொலை செய்த பெண்கள் இருவரில், ஒருவரைக் காவல்துறைக் கைது செய்திருக்கிறது.

இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில், கோலாலம்பூர் விமான நிலையத்தில், 20 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணை, காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து தேசிய காவல்படைத் துணைத் தலைவர் நூர் ரஷீத் இப்ராகிம் கூறுகையில், இரகசிய கேமராவில் பதிவாயிருக்கும் பெண்ணின் உருவமும், கைது செய்யப்பட்டிருக்கும் பெண்ணின் உருவமும் ஒத்துப் போவதாகவும், அதனை வைத்து அடையாளம் கண்டதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், கைது செய்யப்பட்டிருக்கும் பெண் வியட்நாம் கடப்பிதழ் வைத்திருப்பதாகவும் நூர் ரஷீத் குறிப்பிட்டார்.

இதனிடையே, இக்கொலையில் தொடர்புடைய மற்றொரு பெண்ணைக் காவல்துறை தேடி வரும் நிலையில், மேலும் 4 ஆண்களையும் காவல்துறைத் தேடி வருகின்றது.