நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, பார்சிலோனாவில் நடந்த உலக மொபைல் காங்கிரசில் நோக்கியாவின் புதிய அண்டிராய்டு போன்களான நோக்கியா 3, 5 மற்றும்6 ஆகியவற்றோடு, நோக்கியா 3310-ம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தப் புதிய நோக்கியா 3310 போனில், பல்வேறு நவீன வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 2.4 அங்குல வண்ணத் திரை, 16 எம்பி நினைவகம், 2எம்பி கேமரா ஆகியவற்றோடு, 1 மாதத்திற்கு மின்சக்தியைத் தேக்கி வைக்கும் திறன் கொண்ட மின்கலம் ஆகியவை நோக்கியா 3310-ன் சிறப்புக்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
மலேசிய மதிப்பில் 230 ரிங்கிட் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகத் தொழில்நுட்ப இணையதளங்கள் கூறுகின்றன.