Home Featured உலகம் அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை – வெள்ளை மாளிகை வருத்தம்!

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை – வெள்ளை மாளிகை வருத்தம்!

1178
0
SHARE
Ad

kansasவாஷிங்டன் – கடந்த வாரம், அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில், மதுபானக் கூடம் ஒன்றில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஐடி ஊழியர், அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வெள்ளை மாளிகை வருத்தம் தெரிவித்திருக்கிறது.

கன்சாசில் நடந்த இச்சம்பவம் குறித்து வெளிவந்திருக்கும் முதற்கட்டத் தகவல்கள் மிகவும் வருத்தம் அளிப்பதாக வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சீன் ஸ்பைசெர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரியான ஆடம் புரிண்டன் (வயது 51) என்பவர், 32 வயதான ஸ்ரீனிவாசை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன் ஸ்ரீனிவாசை நோக்கி, “என் நாட்டைவிட்டு வெளியே போ” என்று ஆடம் புரிண்டன் கத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இச்சம்பவத்தில், ஸ்ரீனிவாசின் நண்பரும், தடுக்க முயன்ற அமெரிக்கர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.