Home கலை உலகம் ஒரு படத்துக்கு ரூ 30 கோடி சம்பளம் வாங்கும் பிரபு தேவா!

ஒரு படத்துக்கு ரூ 30 கோடி சம்பளம் வாங்கும் பிரபு தேவா!

636
0
SHARE
Ad

prabhu-deva (1)மும்பை, ஏப்ரல் 29 – இந்தியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நட்சத்திர இயக்குநராக உருவெடுத்துள்ளார் பிரபு தேவா. இன்றைய தேதிக்கு இந்திப் படம் ஒன்றிற்கு அவர் பெறும் சம்பளம் ரூ 30 கோடி.

ஒரு நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமான பிரபு தேவா, பின்னர் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இரண்டு படங்களில் நடனமாடிய பிறகு, நேரடியாக இந்து படத்தில் கதாநாயகன் ஆனார். அடுத்து ஷங்கரின் காதலன் படம். அந்தப் படத்தின் மெகா வெற்றி, பிரபு தேவாவை முன்னணி நாயகனாக்கியது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் என்று புகழப்பட்டார் அவர்.

#TamilSchoolmychoice

நாயகனாக வெற்றிகரமாக ஆரம்பித்த அவரது பயணம், கடைசியில் தேய்பிறையானது. சுதாரித்துக் கொண்ட பிரபு தேவா, தெலுங்கில் ஒரு படத்தை இயக்கினார். படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது.

அடுத்து தமிழில் போக்கிரி படத்தை இயக்கினார். அந்தப் படமும் பெரிய வெற்றி. அதே படத்தை இந்தியில் எடுத்தார். அந்தப் படும் தாறுமாறாக ஓடியது. இப்போது பாலிவுட்டில் அதிகம் விரும்பப்படும் இயக்குநர் பிரபுதேவாதான்.

இப்போது ஆக்ஷன் ஜாக்ஸன் என்ற படத்தை இயக்கி வரும் அவர், அடுத்து இயக்கும் படத்துக்கு ரூ 30 கோடி சம்பளம் பெறுகிறார். இதன் மூலம் பாலிவுட்டில் இதுவரை 20 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வந்த ரோஹித் ஷெட்டியைப் பின்னுக்கு தள்ளிவிட்டார்.

அதுமட்டுமல்ல, மெகா இயக்குநர் ஷங்கருக்குக் கூட ரூ 20 கோடிதான் சம்பளம். புதுப்படத்துக்கு இவர் பெற்ற முன்பணம் மட்டுமே ரூ 17 கோடியாம்.