Home One Line P2 மறுவடிவமைக்கப்பட்டது ‘முக்காலா முகாப்லா’ பாடல், அட்டகாசமான ஆட்டத்துடன் பிரபு தேவா!

மறுவடிவமைக்கப்பட்டது ‘முக்காலா முகாப்லா’ பாடல், அட்டகாசமான ஆட்டத்துடன் பிரபு தேவா!

1682
0
SHARE
Ad

சென்னை: நடன இயக்குனரும், நடிகரும், இயக்குனருமான பிரபு தேவாவின் புகழ் பெற்ற ‘முக்காலா முகாப்லா’ எனும் பாடல், 2019-ஆம் ஆண்டு மீண்டும் மறுவடிமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

‘ஸ்ட்ரீட் டான்சர் 3டி’ எனும் இந்தி திரைப்படத்தில் இந்தப் பாடல் மீண்டும் படமாக்கப்பட்டுள்ளது. இதில் பிரபு தேவா நடனம் புரிந்துள்ளார்.

கடந்த 1994-ஆம் ஆண்டுகாதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் உலகெங்கிலும் பிரபலமானது. தற்போது அது இத்திரைப்படத்தின் வாயிலாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் பிரபு தேவா, வருண் தவான், மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நடனமாடியுள்ளனர்.

#TamilSchoolmychoice

மறுவடிவமைக்கப்பட்ட இந்தப் பாடலில் இன்னும் பல சுவாரஸ்யமான நடன அமைப்புகள் மற்றும் மழையில் நடனம் ஆடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அசல் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தாலும், இந்தப் பாடலுக்கு யஷ் நர்வேகர் மற்றும் பரம்பர தாகூர் ஆகியோர் மறுவடிவமைப்புத் தந்துள்ளனர்.

நடன இயக்குனரான இயக்குனர் ரெமோ டிசோசா இந்த பாடல் பிரபு தேவாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் படத்தில் சேர்க்கப்பட்டதாக ஒப்புக் கொண்டார்.

இப்படத்தை பூஷன் குமார், திவ்யா கோஸ்லா குமார், கிருஷன் குமார், மற்றும் லிசெல் டிசோசா ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஸ்ட்ரீட் டான்சர் 3டி வருகிற ஜனவரி 24-ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பாடலின் காணொளியைக் காணலாம்: