Home One Line P1 இண்டா வாட்டர் நீர்ப்பாசன குழாய்க்குள் கழிவுநீரை செலுத்தியதால் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துர்நாற்றம்!

இண்டா வாட்டர் நீர்ப்பாசன குழாய்க்குள் கழிவுநீரை செலுத்தியதால் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துர்நாற்றம்!

694
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொறுப்பற்றவர்கள் கழிவுநீரை சட்டவிரோதமாக இண்டா வாட்டர் நீர்ப்பாசன குழாய்க்குள் செலுத்தியதால், செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எஆர்ஏ)  துர்நாற்றம் ஏற்பட்டதாக தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்) தெரிவித்துள்ளது.

இதுபோன்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயலைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்பான் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்படும் குற்றவாளிகள் நீர் சேவைகள் தொழில் சட்டம் (சட்டம் 655) படி குற்றம் சாட்டப்படுவார்கள்என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

விசாரணை முடிந்ததும், வழக்குக்காக அரசாங்க வழக்கறிஞரிடம் இந்த வழக்கு அனுப்பப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்பான் மற்றும் சிலாங்கூர் நீர் ஆணையம், சுற்றுச்சூழல் துறை, மற்றும் சிலாங்கூர் நீர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து தரப்பும் பிரச்சனையை தீர்க்க செயல்பட்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.