Home Video காமோஷி: தமன்னாவை கதி கலங்க வைக்கும் பிரபுதேவா!

காமோஷி: தமன்னாவை கதி கலங்க வைக்கும் பிரபுதேவா!

1263
0
SHARE
Ad

சென்னை: ‘தேவி 2’ படத்திற்குப் பிறகு மற்றொரு ஹிந்தி படமான காமோஷியில் பிரபுதேவாவும், தமன்னாவும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தினை பில்லா 2 புகழ் இயக்குனர் சக்ரி டாலட்டி இயக்கியுள்ளார். சக்ரி டாலட்டி இயக்கம் என்றாலே அதில் ஒரு மௌனமும் நிதானமும் கலந்து அதிரடியில் உச்சத்தைத் தொடும் என்பதை பில்லா 2 படத்தின் வாயிலாக கண்டிருப்போம். அதே பாணியை இந்த திரைப்படத்திலும் காணலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படம்தேவி 2’ படத்தைப் போன்று திகில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தமன்னா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இப்படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இது இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கீழே இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காளொளியைக் காணலாம்: