Home One Line P2 ‘ஜிப்சி’, ‘பொன் மாணிக்கவேல்’ படங்கள் வெளிவருவதில் மீண்டும் சிக்கல்!

‘ஜிப்சி’, ‘பொன் மாணிக்கவேல்’ படங்கள் வெளிவருவதில் மீண்டும் சிக்கல்!

869
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ஜீவாவின் ‘ஜிப்சி’ மற்றும் பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ ஆகிய இரண்டு படங்களும் இந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது, இவ்விரு படங்களும் வெளியீட்டிற்கு முன்பு மீண்டும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.

முன்னதாக, தொடர்ந்து இப்படங்கள் வெளியிடப்படுவதற்கு தடைகள் இருந்து வந்த நிலையில் மார்ச் 6-ஆம் தேதி படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

படங்களுக்கான விளம்பரங்கள் சீராக நடந்து வந்த நிலையில், இப்படங்களுக்கு திரையரங்குகளில் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

#TamilSchoolmychoice

சென்னை மற்றும் செங்கல்பேட்டையில் உள்ள தேசிய திரையரங்குகள், ஜீவாவின் ‘ஜிப்சி’ மற்றும் பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ ஆகியவற்றிலிருந்து ஆய்வக அனுமதி அனுப்பப்பட்டால் மட்டுமே இணைய முன்பதிவுகளைத் திறப்பதாக தெளிவுபடுத்தியுள்ளன.

இரு படங்களும் சுமூகமாக வெளியாகும் வகையில் பிரச்சினைகள் இன்று மாலை இறுதிக்குள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஜிப்சி’ படத்தை ராஜுமுருகன் இயக்கியுள்ளார். ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படத்தில் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.