Home One Line P2 ஜிப்சி: நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வெளியானது- படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது!

ஜிப்சி: நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வெளியானது- படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது!

945
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ஜீவா நடிப்பில் நீண்ட சர்ச்சைக்குப் பிறகு இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 6) ஜிப்சி திரைப்படம் உலகெங்கிலும் வெளியாக உள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தினை தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

இவரது இயக்கத்தில் வெளியான குக்கூ மற்றும் ஜோக்கர் ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் பாராட்டப்பட்டன. ஜிப்சியில் நாதாஷா சிங் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்காக ‘கிதார்’ வாசிப்பதை ஜீவா கற்றுக்கொண்டதாகவும், அவரது பாத்திரத்திற்காக குதிரை சவாரி செய்வதைக் கற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த படம் ஒரு சமூக நாடகமாக இருக்கும் என்று ஆரம்ப ஊகங்கள் இருந்தன, ஆனால் இது ஒரு சமூக கோணத்துடன் பயணம் செய்யும் காதல் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த படத்திலிருந்து நீக்கப்பட காட்சி ஒன்று யூடியூப் தளத்தில் வெளியாகி, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

“ஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கிடையாது” , “நீதித்துறை சொல்றத காவல் துறை கேட்கமாட்டுது, காவல் துறை சொல்றத நீதித்துறை கேட்கமாட்டுது, மக்கள் சொல்றத எந்த துறையும் கேட்க மாட்டுது” போன்ற வசனங்கள் உண்மை நிலையை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அக்காணொளியைக் காணலாம்: