Home இந்தியா ரேபரேலி, அமேதி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் – பிரியங்கா காந்தி

ரேபரேலி, அமேதி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் – பிரியங்கா காந்தி

702
0
SHARE
Ad

pireeரேபரேலி, ஏப்ரல் 29 – சோனியாகாந்தி போட்டியிடும் ரேபரேலி, ம்ற்றும் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிகளில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசியதாவது, எனது தாயார் போட்டியிடும் ரேபரேலியிலும், என் சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியிலும் உள்ள மக்கள் எங்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்கள்.

இந்த மக்களுக்காக உழைப்பது எங்கள் கடமை. அதை செய்து வருகிறோம். இந்த தொகுதிகளில் காங்கிரசை எதிர்க்கும் அளவுக்கு பலம் வாய்ந்த வேட்பாளர்கள் கிடையாது.

#TamilSchoolmychoice

இங்கு காங்கிரசுக்கு போட்டியாக யாருமே இல்லை. இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என பிரியங்கா பேசினார்.