Home தொழில் நுட்பம் சாம்சங்கின் கேலக்ஸி கே ஸூம் திறன்பேசிகள் அறிமுகம்!

சாம்சங்கின் கேலக்ஸி கே ஸூம் திறன்பேசிகள் அறிமுகம்!

592
0
SHARE
Ad

galaxy-k-zoomமே 1 – சாம்சங் நிறுவனம், வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தன் புதிய தாயாரிப்பான ‘கேலக்ஸி கே ஸூம்’ (Galaxy K Zoom) திறன்பேசிகளை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது. உயர் திறன் கொண்ட புகைப்படங்களை எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு இந்த புதிய திறன்பேசிகளை சாம்சங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கேலக்ஸி கே ஸூம் திறன்பேசிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போது அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் கூறியதாவது:-

“கேலக்ஸி கே ஸூம் திறன்பேசிகள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 20.7 மெகா பிக்சல் திறன் கொண்ட இதன் கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களும், காணொளிக்காட்சிகளும் பயனர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். அதி நவீன லென்ஸ் தொழில் நுட்பத்தின் காரணமாக இதன் ‘ஸூமிங்’ (zooming) செயல்முறை 10x ஆப்டிகல் ஸூம் திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக சமீபத்தில் பயனர்களுக்கு இடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘செல்ஃபி’ (Selfie) தொழில்நுட்பம் சிறப்பானதாக இருக்கும்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

கேலக்ஸி கே ஸூம் திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள்:
ஆண்டிராய்டு 4.4 கிட்கட் இயங்குதளத்தில் இயங்கும் இந்த திறன்பேசிகள், 4.8 அங்குல அளவுடைய HD Super AMOLED தொடுதிரை (1280×720), Dual Core 1.7GHz செயலி (processor) மற்றும் hexa-core செயலியுடன் 1.3GHz quad-core CPU ஆகியவற்றினைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், சிறப்பான 2GB முதன்மை நினைவகம், 8GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இம்மாதத்தில் வெளிவரவிருக்கும் இந்த திறன்பேசிகளின் விலை இன்னும் உறுதிபடத் தெரியவில்லை.