Home Featured தொழில் நுட்பம் சாம்சுங் மடங்கு திரை போனுக்காகக் காத்திருக்கிறீர்களா?- இதை அவசியம் படிங்க!

சாம்சுங் மடங்கு திரை போனுக்காகக் காத்திருக்கிறீர்களா?- இதை அவசியம் படிங்க!

1151
0
SHARE
Ad

Samsung Foltableகோலாலம்பூர் – சாம்சுங் நிறுவனத்தின் மடங்கு திரை (foldable) கொண்ட திறன்பேசியை வாங்குவதற்காகக் காத்திருக்கிறீர்களா? அப்படியென்றால், அதற்கு இன்னும் இரண்டு வருடங்களாவது நீங்கள் காத்திருக்க வேண்டும்.

காரணம், 2017-ல் வெளியிடுவதாய் இருந்த மடங்கு திரை திறன்பேசிகளை, சாம்சுங் நிறுவனம், கொஞ்சம் தாமத்தப்படுத்தி, 2019-ம் ஆண்டில் தான் வெளியிடப் போவதாகத் தகவல்கள் கூறுகிண்றன.

சாம்சுங் நிறுவனத்தின் திரை தயாரிக்கும் முதன்மைப் பொறியியலாளர் கிம் தாய் வூங் கூறுகையில், “தற்போது பெசெல்-ஃப்ரீ (bezel-free) திறன்பேசிகளைத் தயாரிப்பதில் தான் சாம்சங் நிறுவனம் முனைப்பு காட்டி வருகின்றது” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

பெசெல்-ஃப்ரீ இரகத் திறன்பேசிகள் சந்தையில் நன்கு விற்பனையாவதால், இப்போதைக்கு அதில் முனைப்பு காட்டிவிட்டு, 2019-ம் ஆண்டு வாக்கில் மடங்குதிரை திறன்பேசிகளை வெளியிட சாம்சுங் முடிவெடுத்திருப்பதாக கிம் குறிப்பிட்டிருக்கிறார்.

மடங்கு திரை திறன்பேசிகளின் தொழில்நுட்பத்தில், கூடுதல் கவனமும், மேம்பாடும் செய்து, அது வெளியாகும் போது எந்த ஒரு பின்னடைவும் இல்லாத வகையில் வெளியிட சாம்சுங் திட்டமிட்டிருப்பதாக தொழில்நுட்ப இணையதளங்கள் கூறுகின்றன.

bezel lessகடந்த 2013-ம் ஆண்டு சாம்சுங் கேலக்சி நோட் எட்ஜ் வெளியானதற்கு அடுத்த ஆண்டு தான், இந்த பெசெல்-லெஸ் போன்களை சாம்சங் சந்தையில் அறிமுகம் செய்தது.

பெசெல்-ஃப்ரீ என்பது, திறன்பேசியின் திரையைச் சுற்றிலும் மெல்லிய சட்டம் போன்ற ஒரு அமைப்பு இருக்குமே? அது முற்றிலும் நீக்கப்பட்டு, திரை முழுவதுமாக பக்கவாட்டில் விரிந்த நிலையில் இருப்பது தான்.

தற்போது, அதிக விற்பனையில் இருக்கும் இந்த பெசெல்-ஃப்ரீ திறன்பேசிகளுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு குறைந்தால் மட்டுமே அடுத்து மடங்குதிரையை அறிமுகம் செய்ய சாம்சுங் முடிவெடுத்திருக்கிறது.