Home Featured இந்தியா சுற்றுப் பயணிகள் இனி 2 மாதங்கள் இந்தியாவில் தங்கலாம்!

சுற்றுப் பயணிகள் இனி 2 மாதங்கள் இந்தியாவில் தங்கலாம்!

912
0
SHARE
Ad

indian-visa-1புதுடில்லி – இந்திய அரசாங்கம் சுற்றுப் பயணிகளுக்கான விசா நடைமுறைகளை தளர்த்தியிருக்கிறது. அத்துடன் இ-விசா எனப்படும் மின்னியல் விசா நடைமுறைகளும் தளர்த்தப்பட்டிருக்கின்றன.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தப் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தன.

இந்தியா வரும் சுற்றுப் பயணிகள் தற்போது ஒரு மாதம் மட்டுமே தங்க முடியும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு, இனி 2 மாதங்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர்.

#TamilSchoolmychoice

சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டிலிருந்து வரும் உல்லாசப் பயணிகளுக்கான சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கிலும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

இத்தகைய சேவைகளுக்கான வணிகத்தின் மதிப்பு 270 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக இருக்கும் என மதிப்பிடப்படுகின்றது.

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா மற்றும் வணிக விசா, (double-entry on tourist and business e-visas) 30 நாட்களிலிருந்து 60 நாட்களுக்கு அதிகரிக்கப்பட்டு, அந்த கால கட்டத்திற்குள் இரண்டு முறை இந்தியாவுக்கு வந்து செல்லும் வண்ணம் தளர்த்தப்பட்டிருக்கிறது.

மருத்துவ விசாக்கள் கொண்டிருப்பவர்கள் அந்த இரண்டு மாத காலகட்டத்திற்குள் மூன்று முறை இந்தியாவுக்கு வந்து செல்லலாம்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த மாற்றங்களை அறிவித்தார்.

அடிக்கடி வந்து செல்லும் வண்ணம் 5 ஆண்டுகளுக்கான சுற்றுலா மற்றும் வணிக விசாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அவசரத் தேவைகள் இருப்பின், கேட்டுக் கொண்டால், 48 மணி நேரத்திற்குள் விசாக்கள் இந்தியத் தூதரகங்களில் இனி வழங்கப்படும்.