Home நாடு இந்திய விசா கட்டணம் 462.56 ரிங்கிட்டாக உயர்வு – மலேசியர்கள் அதிருப்தி!

இந்திய விசா கட்டணம் 462.56 ரிங்கிட்டாக உயர்வு – மலேசியர்கள் அதிருப்தி!

1728
0
SHARE
Ad

indian-visa-1கோலாலம்பூர் – இந்தியாவுக்கு செல்வதற்கான விசா கட்டணத்தை 462.56 ரிங்கிட்டாக உயர்த்தியிருக்கும் இந்திய அரசின் முடிவுக்கு மலேசியர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மலேசியாவில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் மலேசியர்களுக்கு 4 மாதங்கள் கால அவகாசம் கொண்ட இ-விசா மற்றும் 6 மாத கால அவகாசம் கொண்ட சுற்றுலா விசா என இரண்டு பிரிவுகளில் விசா வழங்கி வந்தது மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம்.

இந்நிலையில், இ-விசா கட்டணத்தை 200 ரிங்கிட்டிலிருந்து 320 ரிங்கிட்டாகவும், 6 மாத விசாவை ஒராண்டாக அதிகரித்து அதற்கான கட்டணத்தை 196.54 ரிங்கிட்டிலிருந்து 462.56 ரிங்கிட்டாகவும் உயர்த்துவதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இப்புதிய கட்டணங்கள் நாளை ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.