“வர்த்தகங்கள் மீது ஜிஎஸ்டியின் தாக்கம்” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கீழ்க்காணும் விவரங்கள் தெரிய வந்துள்ளன.
1. 75 சதவீத வர்த்தக நிறுவனங்கள் தற்போதுள்ள விற்பனை மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறைக்கு பதிலாக புதிய ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரிவிதிப்பை விரும்புகின்றனர்.
2. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பால் தங்களின் வருமானங்கள் மாற்றம் காணும் அல்லது பாதிப்படையும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
3. இருப்பினும் 25 சதவீதத்தினருக்கும் குறைவான நிறுவனங்களே தங்களின் கணினி சம்பந்தப்பட்ட ஊழியர்களை புதிய ஜிஎஸ்டி மீதான பயிற்சிக்கு அனுப்பியுள்ளனர்.
4. 60 சதவீதத்திற்கும் மேலான நிறுவனங்கள் ஜிஎஸ்டி திட்டத்தை அமல்படுத்தும் வியூகத் திட்டங்களை கொண்டுள்ளன.
மலேசிய மக்களில் ஒரு பிரிவினர் இன்னும் இந்த பொருள்சேவை வரி விதிப்பை எதிர்த்து வருகின்றனர்.
ஆனால், உலகில் பல நாடுகளில் இந்த பொருள்சேவை வரி பல கோணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் வழி வர்த்தக நிறுவனங்கள் பொருள்சேவை வரி விதிப்பை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளன என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.