Home உலகம் ஈராக் தேர்தல்: வாக்குப்பதிவு 60% எட்டியது!

ஈராக் தேர்தல்: வாக்குப்பதிவு 60% எட்டியது!

478
0
SHARE
Ad

iraqபாக்தாத், மே 1 – ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் வெளியேற்றத்துக்குப் பிறகு அங்கு தீவிரவாதம் தலைவிரித்தாடுகின்றது. அரசு துறைகளில் ஊழல், வேலையில்லா திண்டாட்டம், அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, மக்களின் உயிருக்கு உத்திரவாதமற்ற சூழ்நிலை என்று பல்வேறு சிக்கலில் சிக்கித் தவிக்கும் அந்நாட்டில் பிரதமர் பதவியை நிர்ணயிப்பதற்காக நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 60 சதவீதம் மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

மொத்தம் உள்ள 328 தொகுதிகளில் சுமார் 9 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில், 2 கோடி மக்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தனர். எட்டாயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தற்போதைய பிரதமர் நூரி அல் மாலிக்கி மூன்றாவது முறையாக பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள், இரண்டு வாக்குச் சாவடிகளை ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் கைப்பற்றியது என பல அச்சுறுத்தல்களுக்கிடையில் நேற்று தேர்தல் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது.

#TamilSchoolmychoice

வாக்குப்பதிவு நிலவரத்தை ஒப்பிட்டு பார்க்கையில், தற்போதையை ஆளும்கட்சி உள்பட யாரும் பெரிய அளவில் வாக்குகளைப் பெற்று முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது கடினம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் தைரியமாக வாக்களித்த ஈராக் மக்களை, அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஜான் கெர்ரி பாராட்டியுள்ளார்.