Home உலகம் எம்எச்370 விமானம் தாய்லாந்து கடற்கரையில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் – அமெரிக்க...

எம்எச்370 விமானம் தாய்லாந்து கடற்கரையில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் – அமெரிக்க விமானி கூறுகிறார்

486
0
SHARE
Ad

Malaysian_Airlines_flight_MH370-369833நியூயார்க், மே 1 – அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த மைக்கல் ஹோபல் என்ற 60 வயது விமானி காணாமல் போன எம்எச்370 விமானம் தாய்லாந்து கடற்கரையில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

தான் சொந்தமாக செய்த ஆய்வின் வழியும் ஆயிரக்கணக்கான துணைக் கோளப்படங்களை ஆய்வு செய்ததன் மூலமாகவும் தான் இந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார்.

விமானம் காணாமல் போனதாக கூறப்படும் மார்ச் 8 ஆம்தேதிக்குப் பிறகு சில நாட்கள் கழித்து தாய்லாந்தின் சொங்லா என்ற இடத்திற்கு மேற்கு பகுதியில் கடலுக்கு அடியில் அந்த விமானம் முழுமையாக இருந்த துணைக்கோளப் படத்தை தான் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த துணைக் கோளப் படங்கள் டோம்நோட்.காம் (TomNod.com) என்ற இணையத்தளப் பக்கத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்த விமானம் குறித்து ஆராய விரும்புபவர்கள் சொந்தமாக ஆராய்ந்து தங்களின்முடிவை தெரிந்து கொள்ளலாம்.

கடலுக்கு அடியில் அந்த விமானம் இருப்பதாக காட்டப்படும் அந்தப் புகைப்படம் காணாமல் போன விமானத்தின் புகைப்படம் தான் என்று உறுதியாக கூறிய ஹோபல், சம்பந்தப்பட்ட துணைக்கோளப் படத்தில் விமானத்தின் நிழல் போல தெரிவதுஒரு பெரிய சுறா மீனாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

காரணம் அந்த துணைக் கோளப் படத்தின் படி அந்த விமானம் 210 அடி நீளமாக இருக்கிறது – சுறாமீன் அவ்வளவு பெரிதாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

தனது கண்டுபிடிப்பு குறித்து இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறினார். தனது கண்டுபிடிப்புகளை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலனாய்வுத்துறையிடம் (FBI) தான் கொடுத்துள்ளதாகவும் ஆனால், இதுவரை அவர்கள் பதில் கூறவில்லை என்றும் ஹோபல் கூறினார்.

இதற்கிடையில், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட், தேடுதல் பணி புதியக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் கடலின் மேற் பகுதியில் எதுவும் கிடைக்காததால் இனி கடலுக்கு அடியில் தேடும் பணிகள் முடுக்கி விடப்படும் என்றும்  கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது