Home உலகம் தெற்கு சூடானில் 9 ஆயிரம் சிறுவர்கள் மீது வன்முறை திணிப்பு: ஐ.நா அதிர்ச்சி!

தெற்கு சூடானில் 9 ஆயிரம் சிறுவர்கள் மீது வன்முறை திணிப்பு: ஐ.நா அதிர்ச்சி!

544
0
SHARE
Ad

sudanஜூபா, மே 1 – தெற்கு சூடானில் அரசுப் படைகளுக்கும், முன்னாள் துணை அதிபரின் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 4 மாத காலம் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இருதரப்பிலும், இதுவரை சுமார் 9 ஆயிரம் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக ஐ.நா. அதிர்ச்சித் தகவல் அளித்துள்ளது.

மூன்று நாள் பயணமாக தெற்கு சூடானுக்கு சென்றுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவி பிள்ளை நேற்று முன்தினம் அதிபர் சால்வா கிர் மற்றும் புரட்சிப்படை தலைவர் ரெயிக் மச்சார் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-“இரு தரப்பினரும் போருக்காக 9 ஆயிரம் சிறுவர்களை ஈடுபடுத்தியிருப்பது மாபெரும் குற்றம். போரின் போது நடத்தப்பட்ட கண்மூடித்தனமாக தாக்குதலில் அந்த குழந்தைகளில் பெரும்பான்மையானோர் கொல்லப்பட்டிருப்பது மன்னிக்கமுடியாத செயல்.”

#TamilSchoolmychoice

“நாட்டில் நிலவும் பஞ்சம் கவலை அளிப்பதாக உள்ளது. ஆனால், இரு தலைவர்களுக்குமே அதைப்பற்றிய கவலை இல்லை. இந்த ஆண்டு இறுதியில் மேலும் பஞ்சம் அதிகரித்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதற்கு நாட்டின் தலைவர்கள்தான் பொறுப்பாவார்கள். மோதல்களை நிறுத்த ஜனவரி மாதம் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். ஆனால், அதனை அவர்கள் மீறியதுடன் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.