Home Featured உலகம் சம்பளத்திற்கு பதில் பெண்களை பலாத்காரம் செய்ய சூடான் ராணுவத்தினருக்கு அனுமதி- ஐ.நா தகவல்!

சம்பளத்திற்கு பதில் பெண்களை பலாத்காரம் செய்ய சூடான் ராணுவத்தினருக்கு அனுமதி- ஐ.நா தகவல்!

878
0
SHARE
Ad

s5ஜெனீவா – ராணுவத்தினருக்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துகொள்ள சூடான் அரசாங்கமே அனுமதி கொடுத்ததாக ஐ.நா.வுக்கான மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சி தகவலை தனது விசாரணை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில்,  கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் நடந்தது. ஆளும் கட்சி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவும், ஆட்சிக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு எதிராக ராணுவம் மூலம் கடுமையாகன தண்டனைகளை வழங்கியதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”அரசுக்கு எதிராக செயல்படும் குடிமக்களை ராணுவம் துப்பாக்கியால் சுட்டும், மரங்களில் கட்டி தொங்கவிட்டும், விஷவாயு அறைகளில் அடைத்தும் கொடூரமாக கொன்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த கொடூர செயலின் உச்சக்கட்டம், கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நிகழ்ந்துள்ளது. அரசுக்கு எதிராக செயல்படும் குடிமக்களை அடக்க ராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர்.

s4ராணுவ வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு பதிலாக அந்நாட்டு அரசாங்கம் கொடூரமான அனுமதியை அளித்துள்ளது. அதாவது, ஊதியத்திற்கு பதிலாக ராணுவ வீரர்கள் அந்நாட்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துகொள்ளலாம் என  அனுமதி வழங்கியுள்ளது. தெற்கு சூடானில் உள்ள 10 மாகாணங்களில் யுனைட்டி  மாகாணமும் ஒன்றாகும்.

இந்த ஒரு மாகாணத்தில் மட்டும் 1,300 பெண்கள் ராணுவ வீரர்களின் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏனைய மாகாணங்களையும் சேர்த்தால், இந்த புள்ளிவிபரம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்ற அச்சத்தையும் தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு சூடானில் உள்நாட்டு போர் தொடங்கியது முதல் யுனைட்டி  மாகாணத்தில் மட்டும் 10,553 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரான செய்த் ராத் அல் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்.