Home One Line P2 மியான்மார்: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 18 பேர் பலி

மியான்மார்: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 18 பேர் பலி

659
0
SHARE
Ad

யங்கோன்: மியான்மாரில் இராணுவ ஆட்சி வந்ததை அடுத்து இதுவரையிலும் 18 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றதில், முறைகேடு நடந்ததாக இராணுவம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததுடன், கடந்த பிப்ரவரி 1- ஆம் தேதி நடப்பு ஆட்சியை கவிழ்த்துவிட்டு இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது.

அத்துடன், இராணுவம் ஆங் சாங் சூகி அதிபர் வின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

#TamilSchoolmychoice

இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் போராட்டத்தை ஒடுக்க அடக்கு முறையை இராணுவம் கையாண்டு வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதலில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை மன்றம் தெரிவித்துள்ளது.