Home One Line P2 ஆஸ்ட்ரோ & ராகா : 7 மார்ச் வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ & ராகா : 7 மார்ச் வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

779
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் மார்ச் 7-ஆம் தேதி வரையில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

திங்கள், 1 மார்ச்

சிவந்து போச்சி நெஞ்சே (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: கிருத்திகா நாயர், கர்ணன் ஜிகிராக், தேவராஜ், வித்யதர்ஷினி ருகுமங்கதன், புஷ்பா நாராயணன், ஷேபி, ரென்னி மார்ட்டின் & ஈஸ்வர் ஜி
இத்தொடர் லிங்கேஷ் மற்றும் அஞ்சனாவின் திருமண வாழ்க்கையை விவரிக்கின்றது. லிங்கேஷின் நடத்தை மற்றும் வாழ்க்கை நடைமுறையின் தேர்வுகள் திருமண வாழ்க்கையைப் பாதிக்கவே, அஞ்சனா தனக்கு நிகழ்ந்த துரோகத்தை எண்ணி மனச்சோர்வில் மூழ்கிறார்.

அவர் இறுதியில் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இணைகிறார். அங்கு யஷ்வின் எனும் இறுதி ஆண்டு மாணவனைச் சந்திக்கவே தனது தேவைகளுக்கு
இணங்குமாறு அம்மாணவனைக் கட்டாயப்படுத்துகிறார். யாழினியைக் காதலிக்கும் யஷ்வின் அஞ்சனாவின் நடத்தையால் பெரும் சங்கடத்திற்குள்ளாகிறான். மறுபுறம், லிங்கேஷ் தனது மனைவியின் நடத்தைக் குறித்து சந்தேகம் கொள்கிறார். அஞ்சனாவின் சிக்கலான வஞ்சக வலை அவிழ்க்கப்படத் தொடங்கவே அது அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது.

இருவர் (புதிய அத்தியாயங்கள் – 16-20)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

பைரேவியைப் பற்றி நிவேதா ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார்.

யார்? (புதிய அத்தியாயங்கள் – 11-15)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

மாலினி கிரிஷை ஒரு பீதி நிலைக்கு ஆழ்த்துவதோடு மைதிலிக்கு என்ன செய்தால் மிகவும் வலிக்குமோ அதைச் செய்கிறார்.

அப்பளசாமி அபார்ட்மென்ட் (புதிய அத்தியாயங்கள் – 5-8)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 8 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தொண்டுச் செய்யும் குணம் கொண்ட அப்பளசாமிக்குச் சொந்தமான ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் (அபார்ட்மென்ட்) வசிக்கும் ஒரு சமூகத்தைச் சித்தரிக்கின்றது, இத்தொடர். முன்னாள் தோட்டத் தொழிலாளியான அவர், மக்களை முன்னிருத்துவதோடு அதில் நம்பிக்கையும் கொண்டவர்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பு அவரது மகன் அரவிந்த்சாமிக்கும் சொந்தமானது. டைமன் பாபுவால் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு நாள், உள்ளூர் அதிகாரிகள், அப்பளசாமி அபார்ட்மென்டிற்கு எதிரான முறைகேடு மற்றும் புகார்களினால் குற்ற அழைப்பாணை  (summons) அனுப்புகின்றனர். அதிருப்தி அடைந்த அரவிந்த்சாமி, டைமன் பாபுவை பணியிலிருந்து நீக்கிவிட்டு, அதிகாரிகளின் அடுத்த நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக 6 மாதங்களுக்குள் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய மேலாளரான ரூபாவதியை நியமிக்கிறார். அப்பளசாமி அபார்ட்மென்டில் உள்ள சிக்கல்கள் எவ்வாறுத் தீர்க்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய தொடரைக் காண்க.

வியாழன், 4 மார்ச்

பம்ஃபாத் (Bamfaad) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆதித்யா ராவல் & ஷாலினி பாண்டே

அலகபாத்தில் தற்செயலாகச் சந்தித்தப்பின் ஒருவருக்கொருவர் காதல் வயப்படும் நதே மற்றும் நீலத்தின் காதல் கதை. அவர்கள் துணிச்சலானத் தேர்வுகளை செய்கின்றனர். எனவே தங்களின் பயணத்தில் அன்பு மற்றும் இழப்பு இரண்டையும் சந்திக்கின்றனர்.

வெள்ளி, 5 மார்ச்

13-ஆம் நம்பர் வீடு (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: சஞ்சீவ் & வர்ஷா பொல்லம்மா

ஒரு புதிய வீட்டிற்குச் சென்ற ஐந்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இரவில் கொடூரமானச் சம்பவங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர்.

சனி, 6 மார்ச்

மேரா பைஸ்லா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: சஞ்ஜை தத், ஜெயா பிராடா, ரதி அக்னிஹோத்ரி & காதர் கான்

ராஜ் ரதியைத் திருமணம் செய்ய விரும்புகிறார். இருப்பினும், ரதியின் தந்தை, மேஜர் வர்மா அவரது குடும்ப பின்னணியைப் பற்றி அறிந்தப் பிறகு ராஜை அவமானப்படுத்துகிறார். ராஜ் பின்னர் காவல்துறை படையில் இணைய முடிவு செய்கிறார்.

தேசி பீட் சீசன் 2 (சீசன் முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 12 மணி, சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்கள்: ராஜ் காய் & நயா அஹமத்

உலகின் பிற பகுதிகளோடு இங்கிலாந்தில் மிகவும் பிடித்த மற்றும் மிகவும் கவர்ச்சியானத் தேசி போக்குகளைக் காண்பிக்கும் நிகழ்ச்சி. உணவு, ஆடை மற்றும் பலவற்றைக் கொண்டுள்ள மிகச்சிறந்த இடங்களைத் தேசி மற்றும் ஒப்பிடமுடியாத பாணியில் சித்தரிக்கின்றது.

டான்ஸ் திவானே சீசன் 3 (சீசன் முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 8.30 மணி, சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நீதிபதிகள்: துஷார் கலியா, மாதுரி டிக்சித் & தர்மேஷ்

மூன்று தலைமுறை நடனக் கலைஞர்களை அழைக்கும் ஒரே இந்திய நடன ரியாலிட்டி நிகழ்ச்சி. ‘டான்ஸ் தீவானா’ பட்டத்தை வெல்ல குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் மூத்தவர்கள் போட்டியிடுவர்.

குயின் (புதிய அத்தியாயம் – 3) *மலேசியாவில் பிரத்தியேகமாக ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, சனி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ரம்யா கிருஷ்ணன், இந்திரஜித் சுகுமாறன், அஞ்சனா ஜெயபிரகாஷ், அனிகா சுரேந்திரன் & வம்சி கிருஷ்ணா

தயக்கமில்லாத அறிமுக நடிகையான, சக்தி சேஷாத்ரியும் இயக்குனர் ஸ்ரீதர் வாசுதேவனும் ஒரு கூட்டணியை உருவாக்குகின்றனர்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), இரவு 9 மணி | ஆன் டிமாண்ட் வாயிலாக வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

ஒரு இளைஞன் தனது வருங்கால மனைவி உட்பட தனது வாழ்க்கையின் சில ஆண்டுகளை மறந்து விடுகிறான்.

ஞாயிறு, 7 மார்ச்

முட்டா: தி இஷூ (Mudda: The Issue) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), பிற்பகல் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆர்யா பப்பர், சௌராப் சுக்லா & ரஜத் கபூர்

ஒரு சிறு நகர பல்கலைக்கழக விரிவுரையாளர் நகரத்தின் இரண்டு அரசியல் போட்டியாளர்களின் இரு மகன்களுக்கிடையேயானக் குடும்பச் சண்டையில் சிக்கிக் கொள்கிறார். இரண்டு மகன்களும் ஒரே பெண்ணின் மீது காதல் வயப்படும் போது சிக்கல்கள் அதிகரிக்கின்றன.

ரசிக்க ருசிக்க சீசன் 6 (புதிய அத்தியாயம் – 4)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்கள்: ஷேபி & பிரசாத்

ஷேபி மற்றும் பிரசாத் ‘ரசிக்க ருசிக்க’ சீசன் 6-ஐ இனிதே தொடங்குகிறார்கள். இம்முறை உணவு விரும்பிகளைக் கவர்ந்திழுக்கும் மலிவான மற்றும் சுவையான உணவு வகைகளைத் தேடி செல்கின்றர்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

செவ்வாய், 2 மார்ச்

நேர்காணல்: பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கானக் கோவிட்-19ஐ கையாளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விருந்தினர்: குழந்தை நிபுணர்

குழந்தைகளிடையே கோவிட்-19 அறிகுறிகள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பலவற்றைப் பகிர்ந்துக் கொள்ளும் குழந்தை நிபுணரின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.

புதன், 3 மார்ச்

நேர்காணல்: பெற்றோர்களிடையே பள்ளி நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகள்

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: ஆலோசகர், இடைநிலைப்பள்ளி

இத்தொற்றுநோய் காலக்கட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு பெற்றோரின் பங்களிப்பை எதிர்பார்க்கும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துக் கொள்ளும் இடைநிலைப்பள்ளி ஆலோசகரின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.

வெள்ளி, 5 மார்ச்

நேர்காணல்: இவ்வாரத்தின் தீர்வு

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விருந்தினர்: செல்வ மலர், விழுதுகள் சமூகத்தின் குரல் நிகழ்ச்சியின் நடுநிலையாளர்

சமூக ஊடகங்களைப் பற்றிய சில ஆக்கப்பூர்வமானக் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளும் விழுதுகள் சமூகத்தின் குரல் நிகழ்ச்சியின் நடுநிலையாளர் செல்வ மலரின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை