Home One Line P1 மியான்மார்: இராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்க உலகளாவிய ஒற்றுமை தேவை!

மியான்மார்: இராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்க உலகளாவிய ஒற்றுமை தேவை!

658
0
SHARE
Ad

யாங்கோன்: மியான்மார் தலைவர் ஆங் சான் சூகியை அகற்றுவதற்கான சதித்திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக மியான்மாரில் இதுவரையிலும் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

மியான்மார் இராணுவம் கொடூரமான ஒடுக்குமுறையில் 500- க்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ளதாக உள்ளூர் கண்காணிப்புக் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், சூ கியை விடுவிக்கவும் கோரி போராட்டங்களுக்கு எதிரான இராணுவத்தின் இரக்கமற்ற நடவடிக்கையை உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

#TamilSchoolmychoice

மியான்மாருடனான வணிக உடன்படிக்கையை வாஷிங்டன் இடைநிறுத்தியுள்ளது. இரத்தக்களரி வன்முறையில் இந்த வார இறுதியில் 100- க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஐக்கிய நாடுகளின் தலைவர் அன்தோனியோ குத்தெரெஸ், இராணுவ ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்க உலகளாவிய ஒற்றுமையைக் கோரினார்.

“இதுபோன்ற மக்களுக்கு எதிரான வன்முறையைப் பார்ப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, பலர் கொல்லப்பட்டுள்ளனர்,” என்று குத்தெரெஸ் ஒரு செய்தியாலர் சந்திப்பில் கூறினார்.

“நமக்கு ஒற்றுமை தேவை. நிலைமையைக் கட்டுப்படுத்த, இராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்க அனைத்துலக சமூகத்திடமிருந்து அதிக அர்ப்பணிப்பு தேவை,” என்று அவர் கூறினார்.

சனிக்கிழமையன்று இராணுவம் தங்கள் வருடாந்திர ஆயுதப்படை தினத்தை தலைநகர் நெய்பிடாவில் கொண்டாடியது. அதே சமயத்தில், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில், ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 107 பேர் கொல்லப்பட்டனர்.