Home One Line P2 மியான்மாரில் தேர்தல் நடக்கும் என்று இராணுவத் தலைவர் அறிவிப்பு

மியான்மாரில் தேர்தல் நடக்கும் என்று இராணுவத் தலைவர் அறிவிப்பு

807
0
SHARE
Ad

யாங்கோன்: ஆட்சி கவிழ்ப்பை எதிர்ப்பு மியான்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரித்து, மியான்மார் இராணுவத் தலைவர் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு தேசிய தொலைக்காட்சியில் பேசிய மின் ஆங் ஹேலிங், மீண்டும் தேர்தல்களுக்கு வாக்குறுதியளித்தார், ஆனால் அது குறித்து எந்த தேதியையும் அவர் கொடுக்கவில்லை.

பிப்ரவரி 1-ஆம் தேதி ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் போராட்டத்தில் பங்குக் கொண்ட 320-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

“ஜனநாயகத்தைப் பாதுகாக்க இராணுவம் முழு தேசத்துடனும் கைகோர்க்க முற்படுகிறது,” என்று மின் ஆங் ஹேலிங் சனிக்கிழமை ஒரு நேரடி ஒளிபரப்பில் கூறினார்.

“கோரிக்கைகளைச் செய்வதற்காக நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வன்முறைச் செயல்கள் பொருத்தமற்றவை,” என்று அவர் கூறினார்.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சியான தேசிய லீக் சட்டவிரோத செயல்களால் தேர்தலை வென்றதால், இராணுவம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டியிருந்தது என்று அவர் மேலும் கூறினார்.