Home One Line P1 டாப் க்ளோவ் தயாரிப்புகளைக் கைப்பற்ற அமெரிக்கா உத்தரவு!

டாப் க்ளோவ் தயாரிப்புகளைக் கைப்பற்ற அமெரிக்கா உத்தரவு!

539
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாப் க்ளோவ் கார்ப்பரேஷன் பெர்ஹாட் தயாரித்த கையுறைகளை கைப்பற்றத் தொடங்க அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (சிபிபி) அனைத்து அமெரிக்க துறைமுகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கையுறை உற்பத்தியாளர், உற்பத்தியில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்துகிறார் என்பதற்கு போதுமான தகவல்களை அது கண்டுபிடித்ததாக சிபிபி தெரிவித்துள்ளது. அதன் பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“இன்றைய கண்டுபிடிப்பு நவீன அடிமைத்தனத்தால் செய்யப்பட்ட பொருட்கள், அமெரிக்க வர்த்தகத்தில் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், ஒரு மாத கால சிபிபி விசாரணையின் விளைவாகும்,” என்று சிபிபி மூத்த அதிகாரி டிராய் மில்லர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அமெரிக்க பயனீட்டாளர்களுக்கு மலிவான, நெறிமுறையற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்க வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களை சுரண்டுவதை சிபிபி பொறுத்துக்கொள்ளாது,” என்று அவர் கூறினார்.

டாப் க்ளோவ் தனது குழுமத்தில் 60 நிறுவனங்களைக் கொண்டுள்ளது மற்றும் 195- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.