Home One Line P1 சுங்கை சிப்புட் தொகுதியை தேமு அம்னோவிடம் ஒப்படைக்க வேண்டும்!

சுங்கை சிப்புட் தொகுதியை தேமு அம்னோவிடம் ஒப்படைக்க வேண்டும்!

560
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஇகா சுங்கை சிப்புட் தொகுதியில் பிற கட்சிகள் போட்டியிட அனுமதிக்கும் தருணம் இது என்று சுங்கை சிப்புட் அம்னோ புத்ரி தலைவர் நோராசுரா அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

சுங்கை சிப்புட் தொகுதியை மஇகா மூன்று முறை கைப்பற்றத் தவறியதைத் தொடர்ந்து நோராசுரா இவ்வாறு கூறியுள்ளார்.

சுங்கை சிப்புட் தொகுதியில் முன்னாள் மஇகா தலைவர் துன் வி.டி.சம்பந்தன் 1959 முதல் 1974 வரையிலும், துன் சாமிவேலு 1974 முதல் 2008 வரையிலும் போட்டியிட்டனர். இருப்பினும், 2008-இல் பிஎஸ்எம் வேட்பாளர் டாக்டர் மைக்கேல் ஜெயகுமார் தேவராஜ் பிகேஆரைப் பிரதிநிதித்து போட்டியிட்டு அந்த இடத்தில் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

“சுங்கை சிப்புட்டில் மஇகா எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டது. துன் சம்பந்தன் தொடங்கி சாமிவேலு வரையிலும் போட்டியிட்டனர். ஆனால், 2008 தொடங்கி மூன்று தேர்தல்களில் மஇகா அத்தொகுதியில் தோல்வி கண்டது. சுமார் 12,000 தேசிய முன்னணி இந்திய வாக்காளர்களை கூட்டணிக்கு கொண்டு வர மஇகாவால் முடியவில்லை.

“ஆகவே, சுங்கை சிப்புட் தொகுதியை தேசிய முன்னணி, அம்னோவிடம் ஒப்படைக்கும் தருணம் இது. இந்த தொகுதி வெற்றி பெறும் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்,” என்று நோராசுரா தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.