Home உலகம் சிரியாவில் பள்ளியின் மீது விமானத் தாக்குதல்:10 குழந்தைகள் பலி

சிரியாவில் பள்ளியின் மீது விமானத் தாக்குதல்:10 குழந்தைகள் பலி

424
0
SHARE
Ad

siriyaபெய்ரூட், மே 1 – சிரியாவில் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த 3 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன.

இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாகியுள்ளனர். இருந்தாலும் போராட்டங்களும், உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

அங்கு புரட்சிப் படையினர் வசம் உள்ள பகுதிகளை மீட்க அரசுப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

டிசம்பர் மாத மத்தியில் இருந்து புரட்சிப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் முக்கிய வர்த்தக நகரமான அலெப்போவிற்கு அருகில் நேற்று ராணுவம் விமான தாக்குதல் நடத்தியது. அப்போது ஒரு பள்ளி மீது வெடிகுண்டு விழுந்து வெடித்ததில் அப்பள்ளியில் இருந்த 10 குழந்தைகள் உள்பட 18 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தரையில் இறங்கி தாக்குதல் நடத்துவதை தவிர்ப்பதற்காக அரசுப் படையினர் சிறிய ரக விமானங்களில் பேரல் குண்டுகள் மற்றும் குறிப்பிட்ட எந்த இலக்கும் இல்லாத ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர்.

போராளிகளின் இலக்குகளை கண்டுபிடித்து தாக்க முடியாததால் இவ்வாறு கண்மூடித்தனமாக தாக்குவதாகவும், இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பலியாவதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.