Home உலகம் சிரியாவில் புரட்சி : ஆட்சியாளர் ஆசாத் குடும்பத்தோடு நாட்டை விட்டு ஓடினார்!

சிரியாவில் புரட்சி : ஆட்சியாளர் ஆசாத் குடும்பத்தோடு நாட்டை விட்டு ஓடினார்!

170
0
SHARE
Ad
பஷார் அல் ஆசாத்

டமாஸ்கஸ் : மத்திய கிழக்கில் மற்றொரு எதிர்பாராத திருப்பமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக் கரம் கொண்டு சிரியாவை ஆண்டு வந்த அசாத் குடும்பத்தினர், உள்நாட்டில் எழுந்த புரட்சி காரணமாக, நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய ரஷியா, அசாத் அதிகாரத்தை அமைதியான மாற்றத்திற்கு உத்தரவிட்ட பின் சிரியாவை விட்டு வெளியேறினார் எனத் தெரிவித்தது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்க்கஸை கிளர்ச்சி படைகள் கைப்பற்றியதாகவும், அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவடைந்ததாகவும், சிரியா கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) அறிவித்தனர்.

கிளர்ச்சிப் படைகள் ஞாயிற்றுக்கிழமை ஒரு துரிதத் தாக்குதலில் டமாஸ்க்கசைக்  கைப்பற்றின. இதன் பின்னர் பல போராளிகளும் குடியிருப்பாளர்களும்  டமாஸ்க்கசில் தெருக்களில் குவிந்து அசாத் ஆட்சியின் முடிவை ஆரவாரம் செய்து கொண்டாடினர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப், ரஷியா, உக்ரேனில் போரில் ஈடுபட்டுள்ளதால் சிரியா மீது கவனம் செலுத்தவில்லை, அவர்களுக்கு ஆதரவு தரவில்லை – அதன் காரணமாகவே சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர் எனப் பதிவிட்டார்.

அமெரிக்கா இதில் தலையிடாது, அமைதியாக என்ன நடக்கிறது என்று பார்ப்போம் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.