Home One Line P2 போப் பிரான்சிஸ் மார்ச் மாதத்தில் ஈராக்கிற்கு பயணம்!

போப் பிரான்சிஸ் மார்ச் மாதத்தில் ஈராக்கிற்கு பயணம்!

504
0
SHARE
Ad

ரோம்: அடுத்தாண்டு மார்ச் 5 முதல் மார்ச் 8 வரை ஈராக்கிற்கான தனது பயணத்தின் போது, போப் பிரான்சிஸ் பாக்தாத், எர்பில், மொசூல் உள்ளிட்ட ஐந்து இடங்களுக்கு வருகை தருவார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. இப்பகுதிகளுக்குச் செல்லும் முதல் போப்பாண்டவர் இவர் ஆவார் என்று அது கூறியுள்ளது.

“பயணத்தின் திட்டம் சரியான நேரத்தில் அறியப்படும். மேலும், உலகளாவிய சுகாதார நிலையையும் கவனத்தில் கொள்ளும்,” என்று செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி திங்களன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அடுத்த வாரம் 84 வயதாகும் போப், நினிவே மாகாணத்தில் உள்ள கராகோஷையும் பார்வையிடுவார்.

#TamilSchoolmychoice

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட அனைத்து வெளிநாட்டு வருகைகளும் இரத்து செய்யப்பட்டன.

ஈராக்கின் அரசாங்கம் வத்திக்கானின் அறிக்கையை வரவேற்றது. போப்பாண்டவரின் வருகை ஒரு வரலாற்று நிகழ்வு என்று அது கூறியது.

“இது ஈராக் மற்றும் முழு பிராந்தியத்திற்கும் சமாதான செய்தியை குறிக்கிறது,” என்று ஈராக் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிபர் பர்ஹாம் சலேஹ், ஜூலை 2019- இல் போப் பிரான்சிஸை ஈராக்கிற்கு வருகை தருமாறு அதிகாரப்பூர்வமாக அழைத்திருந்தார். இது பல ஆண்டுகால மோதல்களுக்குப் பின்னர் நாட்டை சரிப்படுத்த உதவும் என்று அவர் நம்பினார்.

அமெரிக்கா தலைமையிலான 2003-ஆம் ஆண்டு படையெடுப்பிற்குப் பின்னர் குறுங்குழுவாத போரைத் தொடர்ந்து, சுமார் 100,000 கிறிஸ்தவர்கள் ஈராக்கில் எஞ்சியுள்ளனர்.