Home One Line P1 பேராக்: நம்பிக்கை கூட்டணி யாரையும் மந்திரி பெசாராக ஆதரிக்கவில்லை

பேராக்: நம்பிக்கை கூட்டணி யாரையும் மந்திரி பெசாராக ஆதரிக்கவில்லை

515
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் மந்திரி பெசார் பதவிக்கான எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவை உறுதிப்படுத்தவில்லை என்று டத்தோ அஸ்முனி அவி கூறினார்.

பேராக் அமானா தலைவர் செவ்வாயன்று சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க வரவழைக்கப்பட்ட பின்னர் இதனை தெரிவித்தார்

பேராக் அம்னோ தலைவர் சரணி முகமட்டை ஆதரிக்கிறார்களா என்று கேட்டபோது, ஜசெகவின் ங்கா கோர் மிங் மற்றும் பிகேஆரின் பார்ஹாஷ் வாபா சால்வடார் ரிசால் முபாரக் உட்பட மூன்று தலைவர்களும் அமைதியாக இருந்தனர்.

#TamilSchoolmychoice

“சுல்தானை சந்தித்து விட்டோம்,” என்று பார்ஹாஷ் சந்திப்பிற்குப் பிறகு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சுல்தான் நஸ்ரினை சந்தித்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் சிறந்ததை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்று ங்கா கூறினார்.

பங்கோர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காடிர், இஸ்தானா கிந்தாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.