Home உலகம் போப்பாண்டவர் இறுதிச் சடங்கில் டிரம்ப்!

போப்பாண்டவர் இறுதிச் சடங்கில் டிரம்ப்!

161
0
SHARE
Ad

வாஷிங்டன் : திங்கட்கிழமை (ஏப்ரல் 21) காலமான போப்பாண்டவர் பிரான்சிஸ் இறுதிச் சடங்குகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து வெளிநாட்டுப் பயணங்கள் எதனையும் டிரம்ப் மேற்கொள்ளவில்லை.

உலகின் அனைத்து கத்தோலிக்க மதத்தினருக்கும் தலைமை தாங்குபவரான போப்பாண்டவர் பிரான்சிஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) உடல் நலக் குறைவால் காலமானார். அவரின் பூர்வீகம் அர்ஜெண்டினா ஆகும். தென் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவராக அவர் வரலாறு படைத்தார்.

போப்பாண்டவரின் இறுதிச் சடங்குகளில் 75 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் அடுத்த போப்பாண்டவர் யார், அவர் எப்போது தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற ஆர்வமும் கத்தோலிக்கர்களிடையே ஏற்பட்டுள்ளது.