Home Featured உலகம் பாஸ்டன் சென்ற விமானத்தில் ‘கேலக்சி நோட் 7’ பெயரால் பரபரப்பு!

பாஸ்டன் சென்ற விமானத்தில் ‘கேலக்சி நோட் 7’ பெயரால் பரபரப்பு!

833
0
SHARE
Ad

flightசான்பிரான்சிஸ்கோ – அண்மையில் ‘கேலக்சி நோட் 7’ இரக திறன்பேசிகள் திடீரென வெடித்துச் சிதறுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து, இந்த விவகாரம் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

சாம்சங் நிறுவனமும் உடனடியாக அப்படிப்பட்ட போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியது.

அதனையடுத்து, விமானங்களில் அந்த வகை போன்களை எடுத்து வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விமான நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கின.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து பாஸ்டன் நோக்கி சென்ற விர்ஜின் அமெரிக்கா விமானத்தில், ‘கேலக்சி நோட் 7_1097’ என்ற பெயரில் வைஃபை ஹாட் ஸ்பாட் (Wifi Hotspot) ஒன்று செயல்பாட்டில் இருப்பதை அறிந்த விமானி, உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்ததோடு, சம்பந்தப்பட்ட பயணியைக் கண்டறியும் நடவடிக்கையில் இறங்கினார்.

பயணிகளின் மத்தியில்  ‘கேலக்சி நோட் 7’ உரிமையாளரைக் கண்டறியும் சோதனை தோல்வியில் முடிந்ததால், விமானத்தை அவசரத் தரையிறக்கம் செய்தார்.இதனால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில் ‘கேலக்சி நோட் 7’ என்ற பெயரில் வைஃபை ஹாட் ஸ்பாட் (Wifi Hotspot) வைத்திருந்த பயணி தானாக முன்வந்து, தான் வைத்திருப்பது ‘கேலக்சி நோட்7’ இரக திறன்பேசி இல்லை என்றும், தனது வைஃபை அப்படி ஒரு பெயரைக் கொண்டிருப்பதையும் ஒப்புக் கொண்டார்.

அதனையடுத்து, அவ்விமானம் மிகவும் தாமதமாக பாஸ்டன் நகரை நோக்கிப் புறப்பட்டு சென்றது.