Home Featured தொழில் நுட்பம் பிப்ரவரி 2017-ல் சாம்சங் கேலக்சி எஸ்8 அறிமுகம் செய்யப்படலாம்!

பிப்ரவரி 2017-ல் சாம்சங் கேலக்சி எஸ்8 அறிமுகம் செய்யப்படலாம்!

911
0
SHARE
Ad

maxresdefaultகோலாலம்பூர் – திறன்பேசி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் சாம்சங், தனது புதிய வகை திறன்பேசியான கேலக்சி எஸ்8-ஐ வரும் 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 26-ம் தேதி அறிமுகம் செய்யும் என  பிரபல தொழில்நுட்ப இணையதளங்கள் ஆரூடம் தெரிவிக்கின்றன.

அதன்படி, வரும் 2017-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக செல்பேசி காங்கிரசில், நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வில் கேலக்சி எஸ்8 அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே நிகழ்வில், சாம்சங் கேலக்சி எஸ்6, எஸ்6 எட்ஜ் மற்றும் எஸ்5 செல்பேசிகள் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice