Home Featured நாடு பினாங்கில் பிறந்தவர் நியூசிலாந்தில் மேயரானார்!

பினாங்கில் பிறந்தவர் நியூசிலாந்தில் மேயரானார்!

892
0
SHARE
Ad

mayor gurunathan
கோலாலம்பூர் – பினாங்கில் பிறந்தவரான கே.குருநாதன், நியூசிலாந்த் நாட்டின் வெலிங்டன் மாகாணத்தின் கப்பிட்டி கோஸ்ட் பகுதியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடப்பு மேயர் உட்பட மற்ற 5 வேட்பாளர்களைத் தோற்கடித்து அவர் இந்த வெற்றியை அடைந்துள்ளார்.

2016 முதல் 2019-ம் வரையிலான காலக்கட்டத்திற்கு மேயர் பதவி வகிப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், அவர் 8,911 வாக்குகள் பெற்று, 2,300 வாக்குகள் பெரும்பான்மையில் நடப்பு மேயர் ரோஸ் சர்ச்சை தோற்கடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது 63 வயதாகும் குரு, கடந்த 1983-ம் ஆண்டு முதல், மலேசியாவில் நியூ ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ், தி சன் போன்ற பல பிரபல செய்தி நிறுவனங்களில் தலைமை செய்தியாளராகப் பணியாற்றியவர்.

கடந்த 1995-ம் ஆண்டு, வெலிங்டனில் தனது மனைவி கிளேர் மற்றும் குடும்பத்தோடு குடிபெயர்ந்து விட்ட அவருக்குத் தற்போது ஜெஸ்சி காயத்ரி (வயது 33), ரவி (வயது 29), ஆரி (வயது 19) என மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.