Home Featured கலையுலகம் கத்திச்சண்டை நவம்பரில் தான் வெளியாகும் – விஷால் அறிவிப்பு!

கத்திச்சண்டை நவம்பரில் தான் வெளியாகும் – விஷால் அறிவிப்பு!

799
0
SHARE
Ad

kathisandaiசென்னை – விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடிப்பில் தீபாவளிக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘கத்திச்சண்டை’, நவம்பரில் தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விஷால் இன்று செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “வரும் அக்டோபர் 14-ம் தேதி கத்திச்சண்டை டீசரும், தீபாவளி அன்று அதன் பாடல்களும், நவம்பரில் படம் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு தனுஷின் ‘கொடி’, கார்த்தியின் ‘காஷ்மோரா’ ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகிவிட்டதால் விஷால் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

குறிப்பாக, நடிகர் சங்கத் தேர்தலில் தனக்கு மிகவும் பக்கபலமாக இருந்த நடிகர் கார்த்திக்காக அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகின்றது.