சிங்கப்பூர் – 1எம்டிபி தொடர்பான நிதி பரிமாற்றம் நடந்துள்ளதால், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஃபால்கான் தனியார் வங்கியின் சிங்கப்பூர் கிளையை, சிங்கப்பூர் நிதி ஆணையம் (The Monetary Authority of Singapore) தடை செய்வதாக இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
நிதிமோசடியைக் கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய தோல்வியை அவ்வங்கி சந்தித்துள்ளதாகவும், சுவிட்சர்லாந்தில் உள்ள தலைமையகம் மற்றும் சிங்கப்பூரில் இருக்கும் கிளை ஆகியவற்றின் நிர்வாகத்தில் சீர்கேடு நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதோடு, கடந்த அக்டோபர் 5-ம் தேதி, ஃபால்கான் வங்கியின் சிங்கப்பூர் கிளை நிர்வாகி ஜென்ஸ் ஸ்டர்ஜெனேகரை வர்த்தக விவகாரத் துறை கைது செய்துள்ளதாகவும் சிங்கப்பூர் நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.