ஜூரிச்சைச் சேர்ந்த ஃபால்கான் நிறுவனத்தின் உரிமையாளரான அபு தாபியின் அனைத்துலக பெட்ரோலியம் முதலீட்டு கூட்டுறவு நிறுவனத்தின், 2.5 மில்லியன் சுவிஸ் பிரான்க்ஸ் (10.55 மில்லியன் ரிங்கிட்) முறைகேடான வகையில் வந்த லாபம் என்றும், அதனைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் ஃபின்மா உத்தரவிட்டுள்ளது.
அதோடு, முன்னாள் ஃபால்கான் நிர்வாகிகளின் பெயரை வெளியிடாத ஃபின்மா, அந்த இரு அதிகாரிகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Comments