Home நாடு சுவிட்சர்லாந்தில் இருக்கும் 430 மில்லியன் ரிங்கிட் எமது அல்ல – 1எம்டிபி விளக்கம்!

சுவிட்சர்லாந்தில் இருக்கும் 430 மில்லியன் ரிங்கிட் எமது அல்ல – 1எம்டிபி விளக்கம்!

912
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சுவிஸ் அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் சிஎச்எஃப் 104 மில்லியன் (430 மில்லியன் ரிங்கிட்) நிதி, தங்களுடையது அல்ல என்று 1எம்டிபி நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

சுவிஸ் வங்கிகளுக்கும், சுவிஸ் அரசாங்கத்திற்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக தான் இந்த பறிமுதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் 1எம்டிபி குறிப்பிட்டிருக்கிறது.

“சுவிஸ் நிதியமைச்சர் உயெலி மாவ்ரெர் கூறியிருப்பதன் படி, சுவிஸ் நிதி சந்தை மேற்பார்வை ஆணையத்தின் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட சுவிஸ் வங்கிகள் மறுத்திருக்கின்றன. அதோடு கூட்டரசு மேலாண்மை நீதிமன்றத்தில் அந்நடவடிக்கைகளுக்கு எதிராக முறையீடு செய்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

“எனவே, சிஎச்எஃப் 104 மில்லியன் நிதியை சம்பந்தப்பட்ட வங்கிகள் தான் திரும்பப் பெற வேண்டும். 1எம்டிபி நிறுவனமோ அல்லது மலேசிய அரசாங்கமோ அல்ல. அந்த நிதி 1எம்டிபிக்கு சொந்தமானது அல்ல” என்று 1எம்டிபி நிறுவனம் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.