Home இந்தியா நாகரிகமான அரசியல் நடத்துங்கள் – கமலுக்கு தமிழிசை பதிலடி!

நாகரிகமான அரசியல் நடத்துங்கள் – கமலுக்கு தமிழிசை பதிலடி!

1048
0
SHARE
Ad

சென்னை – பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, தனது மின்னஞ்சல், தொலைப்பேசி எண்ணைப் பதிவு செய்து கட்சியில் இணைந்திருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் ஆதாரங்களை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு தலைவராக நாகரிகமான முறையில் நடந்து கொள்ள வேண்டுமென தமிழிசை கூறியிருக்கிறார்.

இது குறித்து இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “கமல்ஹாசன் கட்சியில் எப்படி எனது பெயர் பதிவானது என்று எனக்குத் தெரியவில்லை. அது குறித்த தகவலை வெளியிட்டிருந்தேன். அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. தவறு நடந்திருக்கிறது அதனை நான் சரி செய்கிறேன் என்று ஒரு தலைவர் சொன்னால் அது ஆரோக்கியமான விசயம். ஆனால் நீங்கள் தான் விண்ணப்பித்தீர்கள் என்றால், சிறு குழந்தைக்கும் தெரியும் ஒரு கட்சியின் தலைவர் இவ்வாறு விண்ணப்பிப்பார்களா என்று? எனவே கமல் நாகரீகமான அரசியல் செய்ய வேண்டும்” என்று தமிழிசை தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice