Home இந்தியா தமிழிசையின் கட்சிப் பதிவு ஆதாரத்தை வெளியிட்ட மநீம!

தமிழிசையின் கட்சிப் பதிவு ஆதாரத்தை வெளியிட்ட மநீம!

954
0
SHARE
Ad

சென்னை – நடிகர் கமல்ஹாசனின் புதிய கட்சியான மக்கள் நீதி மய்யம், இணையதளம் வாயிலாக உறுப்பினர்களை இணைத்து வருகின்றது.

கட்சியில் இணைய வேண்டுமானால், மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண், பெயர், ஊர் விபரங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்த பின்னரே, கட்சி இணைந்துவிட்டதாகத் தகவல்கள் வரும்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மக்கள் நீதிமன்றத்தில் தான் இணைந்துவிட்டதாக, கமல்ஹாசன் தனது மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார். கிடைத்த மின்னஞ்சல்களுக்கெல்லாம் இப்படியெல்லாம் அழைப்பு விடுக்கிறார்கள் என்ற ரீதியில் கேலியாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை தனது தொலைப்பேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் கொடுத்து தான் கட்சியில் இணைந்திருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறது.

மேலும், “உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம், எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே.நீங்கள் காட்டியது போல நாங்களும் “படம்” காட்ட விரும்பவில்லை.உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா? ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால்
செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை …பதிவு செய்தமைக்கு நன்றி” என்று மக்கள் நீதி மய்யம் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறது.