Home கலை உலகம் “நலமாக இருக்கிறேன்” அமிதாப்; “உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்” ரஜினி

“நலமாக இருக்கிறேன்” அமிதாப்; “உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்” ரஜினி

830
0
SHARE
Ad

மும்பை – நேற்று வியாழக்கிழமை படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சன் மயங்கி விழுந்தார் என்றும் உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அமிதாப் பச்சன் தான் நலமாக இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்தி மொழியில் கவிதை நடையில் அமிதாப் பச்சன் வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவு கீழ்க்காணும் பொருளில் அமைந்திருக்கிறது:-

“எனது வலி மிகவும் அதிகரித்தது.

#TamilSchoolmychoice

எனவே சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர்.

தற்போது சிகிச்சை முடிந்து விட்டது. நான் தற்போது புதிய மனிதனாக உடல் நலத்தோடு இருக்கிறேன்.

இந்த கால கட்டத்தில் எனக்கு மதிப்பானவர்களை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது”

அமிதாப்பின் மனைவி ஜெயா பாதுரி பச்சன் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து சமஜ்வாடி கட்சியின் சார்பில் இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (ராஜ்யசபா) நியமிக்கப்படுவார் என்று நேற்றுதான் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுத் தாக்கலில் ஜெயா பச்சனின் மொத்த சொத்து மதிப்பு 1,000 கோடி என்றும் தகவல்கள் வெளியாகின.

அந்த சொத்துகள் கடந்த ஆறு ஆண்டுகளில் பன்மடங்கு பெருகியது என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயா பச்சனின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் நியமனத்தைக் கொண்டாட முடியாத அளவுக்கு அமிதாப்பின் உடல்நலக் குறைவு செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினி பிரார்த்தனை

தனது நண்பர் அமிதாப் பச்சன் திடீரென உடல் நலம் குன்றியதைக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த் வட இந்திய தொலைக் காட்சி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அமிதாப் நலமடைய பிரார்த்தனை செய்வதாகக் கூறியிருக்கிறார்.

ரஜினி தற்போது வட இந்தியாவில் இமயமலைப் பகுதியில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.