Home நாடு 1எம்டிபி நிதி மலேசியாவுக்கே திரும்புமா? – சுவிஸ் நாடாளுமன்றம் முடிவு செய்யும்!

1எம்டிபி நிதி மலேசியாவுக்கே திரும்புமா? – சுவிஸ் நாடாளுமன்றம் முடிவு செய்யும்!

761
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபியில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் சிஎச்எஃப்104 மில்லியன் (430 மில்லியன் ரிங்கிட்) நிதி சுவிஸ் அரசாங்கத்தால் முடக்கப்பட்டது.

இந்நிலையில், அந்நிதி மலேசியாவிடமே திரும்ப அளிப்பதா? இல்லையா? என்பதை சுவிஸ் நாடாளுமன்றம் அடுத்த செவ்வாய்க்கிழமை முடிவு செய்யவிருக்கிறது. அதற்காக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவிருக்கிறது.

சுவிஸ் நாடாளுமன்றத்தில் இத்தீர்மானம் குறித்து, சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இன்று வெள்ளிக்கிழமை, செய்தியாளர்களைச் சந்தித்த பெர்சே உட்பட மலேசியாவைச் சேர்ந்த அரசு சாரா அமைப்புகள், சுவிஸ் அரசாங்கத்தால் முடக்கப்பட்ட அந்நிதி மீண்டும் மலேசிய மக்களிடமே திரும்ப கிடைக்கும் முடிவை எடுக்க வேண்டுமென சுவிஸ் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கின்றன.

பெர்சே இடைக்காலத் தலைவர் ஷாருல் அமான் முகமட் ஷாரி கூறுகையில், அந்த நிதியில் மலேசியர்கள் பயனடைவதற்கு முழு உரிமை இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அந்நிதி மலேசிய அரசாங்கத்திடம் வழங்கப்படக் கூடாது என்றும், அந்நிதி மலேசிய மக்களைச் சென்றடையும் வகையில் சுயேட்சையான அமைப்பு மூலம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஷாருல் குறிப்பிட்டிருக்கிறார்.