இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் சங்கப் பதிவிலாகா இவ்வாறு தெரிவித்தது.
பெர்சாத்து உறுப்பினர்கள் அனுப்பிய புகார் கடிதத்தின் அடிப்படையிலேயே தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் சங்கப் பதிவிலாகா கூறியது.
பெர்சாத்து கட்சியின் கிளை, தொகுதிகளின் கூட்டக் குறிப்புகள், நிதி இருப்புகள் குறித்த ஆவணங்களையும் சங்கப் பதிவிலாகா அந்தக் கட்சியிடம் இருந்து கோரியுள்ளது.
இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க சங்கங்களின் 1996 சட்டங்களின்படி 7 நாட்களே அவகாசம் தேவை எனினும் தாங்கள் 30 நாட்கள் அவகாசத்தை பெர்சாத்து கட்சிக்கு வழங்கியிருப்பதாக சங்கப் பதிவிலாகா தெரிவித்தது.
தாங்கள் கோரியுள்ள தகவல்களும், ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படாவிட்டால் சங்கங்களின் சட்டத்தின்படி பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்ய சங்கப் பதிவிலாகா நடவடிக்கை எடுக்கும் என்றும் சங்கப் பதிவிலாகா எச்சரித்துள்ளது.